செம்மறி மற்றும் வெள்ளாடுகளின் தீவன மேலாண்மை

செம்மறி ஆடுகளின் தீவன மேலாண்மை

செம்மறி ஆடுகளின் வயதுக்கேற்ற தீவனப் பராமரிப்பு

1.பெட்டை ஆடுகளுக்கு இனவிருத்திக்கான தீவனம்

i.பெட்டை ஆடுகளின் உடல் பருமனைக் குறைத்தல்

Feeding lactating does
  • உடல் பருமனால் உடலில் அதிக கொழுப்புச் சேர்ந்து இனப்பெருத்தத் திறனைக் குறைக்கும்.
  • ஒரு நல்ல மேய்ப்பாளன், இனப்பெருக்கக் காலத் துவக்கத்திற்கு முன் குறைந்தது ஒன்றரையிலிருந்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஆடுகளின் உடல் பருமனைக் கண்காணித்தல் வேண்டும்.
  • உடல் பருத்த பெட்டைகளை தீவனக் குறைப்பு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் தேவையான சீரான உடலமைப்பிற்கும் படிப்படியாகக் கொண்டு வர முடியும்.
  • பெட்டைகளை இனப்பெருக்கத்திற்கு தயார்படுத்த சீரான மேற்பார்வையின் மூலம் தீவனக் குறைப்பு மற்றும் தீவிர உடற்பயிற்சி அளிக்க வேண்டும்

 ii.பெட்டைகளுக்கான இனப்பெருக்கக் காலக் கூடுதல் தீவனம்

Feeding lactating does
  • இனப்பெருக்கத்திற்கு சுமார் இரண்டிலிருந்து மூன்று வாரங்களுக்கு முன்னரே, பெட்டைகளின் உடல் எடையை அதிகரிக்கும் வகையில் அவற்றின் தீவனத்தில் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்க வேண்டும்.
  • இதன் மூலம், பெட்டைகள் விரைவில் சினைப்பருவம் எய்தவும், குட்டிகள் ஈனவும் வழிவகுக்கலாம்.
  • மேலும், பெட்டைகளின் சினைப்பருவ இடைவெளி சமமானதாகவும், குட்டி ஈனும் எண்ணிக்கை சீரானதாகவும் அமையும்,
  • அது மட்டுமல்லாமல், இனப்பெருக்கக் காலக் கூடுதல் தீவனமளித்தல் மூலம் குட்டி ஈனும் விகிதத்தையும், ஒரே ஈற்றில் பல குட்டிகள் ஈனும் விகிதத்தையும் அதிகரிக்கலாம்.
  • இந்தியாவில், இந்த காலம் பொதுவாக மே மாத இறுதியில் வருகின்றது.
  • தீவன மூலப் பொருட்கள் கிடைப்பதைப் பொருட்டு வெவ்வேறு வகையான இனப்பெருக்கக் காலக் கூடுதல் தீவனக் கலவைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பரிந்துரைக்கப்பட்ட இனப்பெருக்கக் காலக் கூடுதல் தீவனக் கலவைகள்

  • பயிறு மற்றும் புல் வகைத் தீவனங்களின் ஒரு நல்ல கலவை.

  • ஒரு ஆட்டிற்கு, ஒரு நாளைக்கு புல் தீவனத்துடன், 150 கிராம் கோதுமைத் தவிடு.

  • புல் தீவனத்துடன் 250 கிராம் தானியம், 450 கிராம் புண்ணாக்கு.

  • பயிறு வகை உலர் புல்லுடன் 100 கிராம் கோதுமைத் தவிடு, 150லிருந்து 200 கிராம் தானியம் மற்றும் ஒரு ஆட்டிற்கு, ஒரு நாளைக்கு உடல் எடையில் 10 சதவிகித அளவு பசும்புல் மற்றும் 150லிருந்து 200 கிராம் அடர் தீவனம்.

2.சினைக்காலம் முன்னரும், இடையிலும் பெட்டைகளுக்கு தீவனமளித்தல்

  • சினைக் காலத்தில் நல்ல தீவனமளித்தல்தான் நல்ல குட்டி ஈனுதலின் திறவு கோலாகும்.
  • தீவனமளித்தல் போதாமலும், குறையுள்ளதாகவும் இருப்பின், நலிந்த இறந்த குட்டிகள் பிறக்க வாய்ப்புண்டு.
  • பலமுள்ள ஆரோக்கியமான உயிருள்ள குட்டிகளின் ஈனும் எண்ணிக்கையை இது அதிகரிக்கும்.
  • பெட்டைகளின் உற்பத்தி வாழ்நாளை நீட்டிக்கும்.
  • பெட்டைகளின் பால் உற்பத்தி அளவை அதிகரித்து அதன் மூலம் ஆரோக்கியமான குட்டிகளைப் பெற முடியும்.
  • மேலும் இது கம்பள உற்பத்தியையும் அதிகரிக்கின்றது.
  • குட்டிகளில் முடக்குவாதத்தின் நிகழ்வைக் குறைக்கிறது.
  • பெட்டைகள் உடல் சோர்வு மற்றும் தளர்வினால் குட்டிகளை ஒதுக்கும் வாய்ப்பும் குறைகிறது.

பெட்டைகளுக்கு இந்த தருணத்தில் பரிந்துரைக்கப்படும் தீவனக் கலவை

  • நல்ல மேய்ச்சல்

  • சோளப் பதனப் பசுந்தீவனம் : ஒன்றிலிருந்து இரண்டு கிலோ சோளப் பதனப் பசுந்தீவனத்துடன் பயிறுவகை உலர் புல்அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வீதம் - ஒரு ஆட்டிற்கு ஒரு நாளைக்கு.

  • ஒரு ஆட்டிற்கு ஒரு நாளைக்கு மக்காச் சோளம் அல்லது சோளப் பசுந்தீவனம் வேண்டுமளவும், கடலைப் பிண்ணாக்கு போன்ற பிண்ணாக்கு வகைகள் 50 கிராம், கொடுக்க வேண்டும்.

  • அறுவடைக்குப் பின் எஞ்சி இருக்கும் நிலங்களில் மேய்ச்சலுடன் 100 கிராம் பிண்ணாக்கு ஒரு ஆட்டிற்கு ஒரு நாளைக்கு.

 

2.சினைக்காலம் முன்னரும், இடையிலும் பெட்டைகளுக்கு தீவனமளித்தல்

  • சினைக் காலத்தில் நல்ல தீவனமளித்தல்தான் நல்ல குட்டி ஈனுதலின் திறவு கோலாகும்.
  • தீவனமளித்தல் போதாமலும், குறையுள்ளதாகவும் இருப்பின், நலிந்த இறந்த குட்டிகள் பிறக்க வாய்ப்புண்டு.
  • பலமுள்ள ஆரோக்கியமான உயிருள்ள குட்டிகளின் ஈனும் எண்ணிக்கையை இது அதிகரிக்கும்.
  • பெட்டைகளின் உற்பத்தி வாழ்நாளை நீட்டிக்கும்.
  • பெட்டைகளின் பால் உற்பத்தி அளவை அதிகரித்து அதன் மூலம் ஆரோக்கியமான குட்டிகளைப் பெற முடியும்.
  • மேலும் இது கம்பள உற்பத்தியையும் அதிகரிக்கின்றது.
  • குட்டிகளில் முடக்குவாதத்தின் நிகழ்வைக் குறைக்கிறது.
  • பெட்டைகள் உடல் சோர்வு மற்றும் தளர்வினால் குட்டிகளை ஒதுக்கும் வாய்ப்பும் குறைகிறது.

  பெட்டைகளுக்கு இந்த தருணத்தில் பரிந்துரைக்கப்படும் தீவனக் கலவை

  • நல்ல மேய்ச்சல

  • சோளப் பதனப் பசுந்தீவனம் : ஒன்றிலிருந்து இரண்டு கிலோ சோளப் பதனப் பசுந்தீவனத்துடன் பயிறுவகை உலர் புல்அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வீதம் - ஒரு ஆட்டிற்கு ஒரு நாளைக்கு.

  • ஒரு ஆட்டிற்கு ஒரு நாளைக்கு மக்காச் சோளம் அல்லது சோளப் பசுந்தீவனம் வேண்டுமளவும், கடலைப் பிண்ணாக்கு போன்ற பிண்ணாக்கு வகைகள் 50 கிராம், கொடுக்க வேண்டும்.

  • அறுவடைக்குப் பின் எஞ்சி இருக்கும் நிலங்களில் மேய்ச்சலுடன் 100 கிராம் பிண்ணாக்கு ஒரு ஆட்டிற்கு ஒரு நாளைக்கு.

3.சினைக் கால இறுதியில் பெட்டைகளின் தீவனப் பராமரிப்பு

  • பெட்டைகளை அறுவடைக்குப் பின் உள்ள நிலங்களில் மேய்ச்சலுக்கு அனுப்பலாம்.
  • பசும்புல் ஒரு ஆட்டிற்கு ஒரு நாளைக்கு 5 கிலோ என்ற விகிதத்தில் தீவனத்துடன் சேர்க்கப்பட வேண்டும்.
  • சினைக் காலத்தின் இறுதி ஒரு மாதத்தின் போது, கருப்பையில் கருவின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
  • தீவனத்தில் போதிய எரிசக்தி இல்லாவிடில், பெட்டைகள் சினைப்பருவ நச்சேற்றத்தினால் பாதிக்கப்படும்.
  • கரும்புச் சர்க்கரை பாகு அல்லது தானியங்கள் (பார்லி, மக்காச்சோளம், ஓட்ஸ்) ஒரு ஆட்டிற்கு ஒரு நாளைக்கு 225 கிராம் என்ற அளவில் வழங்கப்பட வேண்டும்.
  • மேலும், பெட்டைகளுக்கு ஒரு ஆட்டிற்கு ஒரு நாளைக்கு 7 கிலோ பசும்புல் அளிக்கப்பட வேண்டும்.
  • சினைக் காலத்தின் இறுதி 45 நாட்களுக்கும், 600 கிராம் தரமான பயிறு வகை உலர்புல் அல்லது 12லிருந்து 14 சதவிகிதம் செரிமான கச்சா புரதம் மற்றும் 65லிருந்து 70 சதவிகிதம் மொத்த செரிமான சத்தடங்கிய அடர் தீவனம் 300 கிராமும் அளிக்கப்பட வேண்டும்.

4.குட்டி ஈனும் சமயத்தில் பெட்டைகளின் தீவனப் பராமரிப்பு

Feeding lactating does
  • குட்டி ஈனும் காலம் நெருங்கும் தருவாயில், தீவனத்தில் தானியங்களின் அளவை வெகுவாகக் குறைத்து, நல்ல தரமான உலர்புல் தீவனத்தை போதுமான அளவு அளித்தல் வேண்டும்.
  • குட்டி ஈன்ற பின், பெட்டைகளின் தீவன அளவைப் படிப்படியாக அதிகரித்து, தீவனமளிப்பதை ஒரு நாளைக்கு ஆறிலிருந்து ஏழு முறையாகப் பிரித்து, அதன் மூலம் தேவையான முழுத் தீவனத்தை யும் அடையுமாறு செய்ய வேண்டும்.
  • பொதுவாக, எளிதில் செரிக்கக்கூடிய தீவன மூலம் பொருட்களை கன்று ஈன்ற முதல் சில நாட்களிலேயே தீவனத்தில் சேர்க்க வேண்டும்.
  • கோதுமைத் தவிடு மற்றும் பார்லி அல்லது ஓட்ஸ் அல்லது மக்காச் சோளம் 1:1 என்ற விகிதத்தில் சேர்த்தல் நல்லது.
  • குட்டி ஈன்ற உடனேயே, பெட்டை ஆட்டிற்குப் போதிய அளவு மிதமான வெந்நீர் அளிக்க வேண்டும்.
  • முதல் கட்டி ஈன்ற  பொழுதே, குட்டிகளுக்கான ஆரம்ப காலத் தீவனத்தை கணக்கிடத் துவங்கி விட வேண்டும்.
  • ஒரு நிறைவான ஆரம்ப காலத் தீவனமென்பது, 16 பாகங்கள் வேர்க்கடலைப் பிண்ணாக்கு மற்றும் 84 பாகங்கள் பார்லி அல்லது மக்காச்சோள தானியங்கள் மற்றும் பசும் அல்லது உலர் தீவனப் பயிர்அடங்கியதாகும்.

5.பால் கொடுக்கும் பெட்டைகளின் தீவனப் பராமரிப்பு

Feeding lactating does
  • பால் உற்பத்தியைப் பராமரிக்க, பால் கொடுக்கும் பெட்டைகளின் தீவனத்தில், குட்டிகளின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தத் தேவையான தீவன மூலப் பொருட்கள் கலக்கப்படவேண்டும்.
  • பெட்டைகளுக்கு நல்ல மேய்ச்சல் இருந்தாலே, அவற்றின் தேவைகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து விடும். கூடுதல் ஊட்டச்சத்து தேவைப்படும் போது, அதிகரிக்க வேண்டிய  தீவன அளவு கீழ் வருமாறு :
    • ஒரு பெட்டை ஆட்டின் ஒரு நாள் சராசரி தேவைகளை 450  கிராம் நல்ல உலர்புல், 1.4 கிலோ பதனப் பசுந்தீவனம் அல்லது 250 கிராம் தானியங்கள் ஆகியவற்றினால் 50 சதவிகிதம் ஈடு செய்ய வேண்டும்.
    • பயிர்விக்கப்பட்ட பசும்புல் தீவனப் பயிர் அளிப்பதாயிருந்தால், ஒரு ஆட்டிற்கு ஒரு நாளைக்கு 10 கிலோ அல்லது 400 கிராம் அடர் தீவனம் அல்லது 800கிராம் தரமான பயிறு வகை உலர் புல் என்ற அளவில் குட்டி ஈன்ற பின் 75 நாட்களுக்கு, 8மணி நேர மேய்ச்சலும் அளிக்க வேண்டும்.

6.குட்டிகளை பெட்டையிடமிருந்து பிரித்த நாள் முதல் அடுத்த இனப்பெருக்கம் வரையிலான தீவனப் பராமரிப்பு

  • தீவன ஊட்டச்சத்து தேவைகளைப் பொருத்தமட்டில் இந்த நேரத்தில் தான் அதிக கவனத்திற்கு அவசியமில்லாத காலமாகும்,
  • பெட்டைகளை முழுமையாக மேய்ச்சலிலேயே பராமரிக்கலாம். இந்த தருணத்தில் தான் தரம் குறைந்த நார்ப்புல் தீவனம் ஆகியவற்றைக் கூட இலாபகராமாக உபயோகித்துக் கொள்ளலாம்.

2.கிடாக்களின் இனப்பெருக்கத்திற்கான தீவன பராமரிப்பு

Feeding lactating does
  • இனப்பெருக்கத்தின் போது கிடாக்களுக்குக் கூடுதலான ஊட்டச்சத்து தேவைப்படுகின்றது.
  • அதே சமயம், கூடுதல் எடையுள்ள கிடாக்களை இனப் பெருக்கத்திற்கு முன் உடல் எடை மெலியச் செய்ய வேண்டும்.
  • தீவனக் குறைப்பு மற்றும் தீவிர உடற்பயிற்சி மூலம் படிப்படியாக குறைக்கலாம்.
  • பொதுவாக, கிடாக்களை பெட்டைகளுடன் சேர்த்து மேய்ச்சலுக்கு விடுவதன் மூலம், பெட்டைகளுக்கு கிடைக்கும் அதே ஊட்டச்சத்துக்களைக் கிடாக்களும் பெறச் செய்வது வழக்கம்.
  • கிடாக்களுக்கென தனியாக தீவனம் அளிக்க வேண்டுமெனில், 3 பாகங்கள் ஓட்ஸ் அல்லது பார்லி ஒரு பாகம், மக்காச்சோளம் மற்றும் ஒரு பாகம் கோதுமை அடங்கிய அடர் தீவனக் கலவை ஒரு நாளைக்கு ஒரு கிடாவுக்கு 300லிருந்து 500 கிராம் என்ற அளவில் அளிக்க வேண்டும்.

3.குட்டிகளின் தீவனப் பராமரிப்பு

1.பால் குடிக்கும் குட்டிகளின் தீவனப் பராமரிப்பு

Feeding lactating does
  • இந்த சமயத்தில், குட்டிகள் தங்கள் ஊட்டச்சத்துத் தேவைக்குப் பெரிதும் தாய்ப்பாலையே சார்ந்திருக்கின்றன.
  • குட்டிகளுக்கு ஒரு மாத வயதாகும் போது அடர் தீவனம் அளிக்கத் துவங்க வேண்டும்.

1.1குட்டிகளுக்குச் சீம்பால் அளித்தல்

  • முதல் மூன்று அல்லது நான்கு தினங்களுக்குக் குட்டிகளுக்கு நல்ல சீம்பால் கிடைக்க அவற்றைத் தன் தாயிடம் பால் குடிக்கச் செய்ய வேண்டும்.

    • குட்டிகளின் இழப்பைத் தவிர்ப்பதில் சீம்பால் அளித்தல் முக்கிய பங்கு வகிக்கின்றது.
    • பசுவின் சீம்பால் கூட குட்டிகளுக்கு மிகவும் சிறந்தது.
    • ஒரு கிலோ உயிர் எடைக்க 100மி.லி. என்ற அளவில் சீம்பால் அளிக்க வேண்டும்.
    • சீம்பாலை 1-1.5 சதவிகிதம் (கனஅளவு/எடை) ப்ரோபியோனிக் அமிலம் அல்லது  0.1 சதவிகிதம் ஃபார்மால்-டிஹைட் கொண்டு பதப்படுத்தலாம்.  சீம்பாலின் அமிலக் காரக் குறியீட்டைக் குறைவாகவே வைப்பதால் ப்ரோபியோனிக் அமிலமே ஏற்றதாகக் கருதப்படுகிறது.
    • இவ்வாறு பதப்படுத்தப்படும் சீம்பாலின் தரத்தைப் பாதுகாக்க குளிர் நிலையில் வைத்தல் வேண்டும்.

1.2 இளங்குட்டிகளின் தீவனப்பராமரிப்பு

  • இளங்குட்டிகளுக்கு ஒரு மாதத்திலிருந்து 3 மாத வயதிலேயே தீவனமளிக்கத் தொடங்கி விட வேண்டும்.
  • இளங்குட்டிகளுக்கென தீவனமளிப்பது அவற்றின் துரித வளர்ச்சிக்கு உதவுகின்றது.
  • ஒரு குட்டிக்கு ஒரு நாளைக்கு 50லிருந்து 100கிராம் அளவு தீவனம் கொடுக்கலாம்.
  • இதில் 22 சதவிகிதம் புரதம் இருக்க வேண்டும்.
  • ஆக்ஸிடெட்ராசைக்லின் அல்லது க்ளேர்டெட்ராசைக்லின் போன்ற நுண்ணுயிர்கொல்லிகள் 15லிருந்து 25மி/கி என்ற அளவில் தீவனத்தில் சேர்க்க வேண்டும்.

1.3 நிறைவான மாதிரி இளங்குட்டிகளின் தீவனக்கலவை

  • மக்காச்சோளம்                                 -           40 சதவிகிதம்
    கடலைப் பிண்ணாக்கு                     -           30 சதவிகிதம்
    கோதுமைத் தவிடு                            -           10 சதவிகிதம்
    எண்ணெய் நீக்கப்பட்ட அரிசி உமி           -           13 சதவிகிதம்
    கரும்புச் சர்க்கரைப்பாகு                  -           5 சதவிகிதம்
    தாது உப்புக் கலவை                                    -           2 சதவிகிதம்
    உப்பு                                                   -           1 சதவிகிதம்

  • இவற்றுடன் உயிர்ச்சத்துக்கள் ஏ, பி2 மற்றும் டி3, நுண்ணுயிர்க்கொல்லி ஆகியவை சேர்க்கப்பட்டு ஊட்டச்சத்து ஏற்றம் செய்யப்பட வேண்டும்.

1.4 பிறந்த நாள் முதல் 90 நாட்கள் வரை குட்டிகளுக்கான தீவனப் பட்டியல்:

குட்டிகளின் வயது பெட்டையின் சீம்பால் அல்லது பசுவின் பால் (மி.லி.) குட்டிகளின் தீவனம் (கிராம்) நார்த் தீவனம் பசுமை/உலர்ந்ந் (கிராம்)
1-3 நாட்கள் சீம்பால் - 300 மி.லி. 3 முறை - -
4-14நாட்கள் பால் - 350மி.லி. 3 முறை - -
15-30 நாட்கள் பால் - 350 மி.லி. 3 முறை சிறிது சிறிது
31-60 நாட்கள் பால் - 400மி.லி. 2 முறை 100-150 போதுமான அளவு
61-90 நாட்கள் பால் - 200 மி.லி. 2 முறை 200-250 போதுமான அளவு

 

2.தாயிடமிருந்து விரைவிலேயே பிரிக்கப்பட்ட அல்லது தாயிழந்த குட்டிகளின் தீவனப் பராமரிப்பு


  • குட்டிகளைப் பொதுவாக மூன்று மாத வயதில் தாயிடமிருந்து பிரிக்க வேண்டும். தாயிழந்த அல்லது தாயால் ஒதுக்கப்பட்ட (அநாதை) குட்டிகளும் உண்டு.
  • பால் குடிக்கும் இளங்குட்டிகள், தாயிடமிருந்து விரைவிலேயே பிரிக்கப்பட்டவை, அநாதை குட்டிகளுக்கும் நன்றாகத் தீவனமளிக்க வேண்டும்.
  • ஆறு வார வயது வரை, குட்டிகளுக்குத் தானியங்களை உடைத்துத் தான் தர வேண்டும்.
  • கடினத் தோலுடைய தானியங்களைத் தவிர்த்து மற்றவை பின் நாட்களில் அப்படியே வழங்கப்படலாம்.
  • தானியங்களுடன் இவற்றுக்குத் துண்டாக்கப்பட்ட நல்ல பசும்புல் அல்லது பயிறு வகை உலர் புல்லும் அளிக்கப்பட வேண்டும்.
  • பயிறு வகை உலர் புல் அல்லது தரமான மேய்ச்சல் இல்லாத போது, வெறும் குறைவான நார்த்தீவனம் மட்டுமே கிடைக்கும். சமயங்களில் தானிய  தீவனத்துடன் புரதமும் உயிர்ச்சத்துக்களும் ஏறக்குறைய 12சதவிகித செரிமான கச்சா புரதமும் கிடைக்குமளவில் சேர்க்க வேண்டும்.
  • நார்த்தீவனம் மற்றும் அடர்த்தீவனம் இரண்டும் கலந்த தீவனத்தை முழுவதுமாகவே குறுணை வடிவமாக்கிக் கொடுத்தல் இலாபகரமானது.
  • இதன் மூலம் குட்டிகள் நிறைய தீவனம் உட்கொள்வதோடு, விரைவில் வளரவும் வழி செய்கிறது.
  • குருணைகளில் ஊட்டச்சத்துக்களைத் தேவைக்கேற்ற அளவில் எளிதில் சேர்த்துக் கொள்ள முடிவதோடு, குட்டிகள் தானாகவே உட்கொள்ளக் கூடியதாகவும் உள்ளதால், மொத்தமாக தீவனம் உட்கொள்ளும் அளவை ஏறக்குறைய நிலையானதாக மாற்ற முடியும்.
  • குருணைகளில், ஆரம்பத்தில் நார்ச்சத்தானது 65லிருந்து 70 சதவிகிதம் உள்ளது. பின்னர் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, 10லிருந்து 12 வார வயதில், 50சதவிகிதம் என்ற அளவில் உள்ளது.

இளங்குட்டிகளுக்கும் தாயிடமிருந்து விரைவில் பிரிக்கப்பட்ட குட்டிகளுக்கும் பரிந்துரைக்கப்பட்ட தீவனக் கலவைகள்

  • மக்காச்சோளம் 40 சதவிகிதம், ஒட்ஸ் 30 சதவிகிதம், பார்லி 30 சதவிகிதத்துடன் குதிரை மசால், உலர்புல் போதுமான அளவு.

  • ஓட்ஸ் 20 சதவிகிதம். மக்காச்சோளம் 40 சதவிகிதம். பார்லி 20 சதவிதம், வேர்க்கடலைப் பிண்ணாக்கு20 சதவிகிதத்துடன் உயிர்ச்சத்துக்களின் சேர்க்கை.

  • மக்காச்சோளம் 25 சதவிகிதம், ஓட்ஸ் 40 சதவிகிதம், கோதுமைத் தவிடு 20 சதவிகிதம், வேர்க்கடலைப் புண்ணாக்கு 15 சதவிகிதத்துடன் உயிர்ச்சத்துக்களின் சேர்க்கை.

 3.தாயிடம் பிரிக்கப்பட்டதிலிருந்து சந்தைக்குச் செல்லும் வரையிலான தீவனப் பராமரிப்பு

Feeding lactating does
  • தீவனங்களின் வகைகள் மற்றும் தீவனமளிப்பு முறைகள் ஆகியன பொருளாதார மற்றும் சுற்றுச் சூழல் மற்றும் தீவன மூலப் பொருட்களின் கிடைக்கக் கூடியத் தன்மையைப் பொருத்து வேறுபடும்.
  • வளர்ந்து வரும் நாடுகளில், மேய்ச்சல் நிலங்கள், மேய்ச்சலுக்கல்லாத  நிலங்கள் மற்றும் தானியங்களின் அறுவடையில் எஞ்சியவைகளை சிறந்த முறையில்,  முடிந்த வரை பயன்படுத்தி, சத்துக்குறைபாடு உள்ள போது நல்ல தரமான பசுந்தீவனம், உலர்புல் அல்லது அடர் தீவனத்தினால் சினைக்கட்டுவதையே கொள்கையாகக் கொண்டுள்ளனர்.
  • சராசரியாக ஒரு குட்டிக்கு 225லிருந்து 450 கிராம் அடர் தீவனக் கலவையை மேய்ச்சலைப் பொருத்துக் கொடுக்கலாம்.
  • மேய்ச்சல் அதிகமாக  இருப்பின் 225 கிராம் அடர் தீவனமே போதுமானது.
  • மேய்ச்சல் நிலம் ஏற்கனவே  நிறைய மேய்ச்சலுக்குட்பட்டிருந்தால், 450 கிராம் அடர் தீவனத்துடன் அரை கிலோவிலிருந்து 2 கிலோ கிராம் வரை நல்ல பசுந்தீவத்தைச் சேர்த்துக் கொள்ளவேண்டும்

II அனுமதிக்கப்பட்ட தீவன அளவு

 

உடல் எடை (கிலோ) பயிறு வகை பசுந்தீவனம் கிடைக்கும் போது பயிறு வகை பசுந்தீவனம் கிடைக்காத போது
வரை 12 25-50 200-300
12-15 50 300
15-25 100 400
25-35 150 600

 

வெள்ளாடுகளின் தீவன மேலாண்மை

வெள்ளாடுகளின் வயதுக்கேற்ற தீவனப் பராமரிப்பு

A. வெவ்வேறு பருவங்களில் வெள்ளாடுகளின் தீவனப் பராமரிப்பு

1. பெட்டை ஆடுகளுக்கு இனவிருத்திக்கான தீவனம்


  • நல்ல மேய்ச்சல் இருப்பின் அடர் தீவனச் சேர்க்கைக்கு அவசியமில்லை.
  • மேய்ச்சல் நன்றாக அமையாத போது, ஒரு ஆட்டிற்கு ஒரு நாளைக்கு வயதிற்கேற்ப அடர்தீவனம் 150 – 350 கிராம் என்ற அளவில் சேர்க்கப்பட வேண்டும்.
  • பருவமடைந்த ஆடுகளின் தீவனத்தில் சேர்க்கப்படும் அடர்தீவனக் கலவையில் செரிமான கச்சா புரதத்தின் அளவு 12 சதவிகிதம் ஆகும்

2.பெட்டைகளின் முதல் நான்கு மாத சினைக்காலத் தீவனப் பராமரிப்பு :

  • சினையாக இருக்கும் பெட்டைகளுக்கு 4லிருந்து 5 மணி நேரம் நல்ல தரமான மேய்ச்சல் அவசியம்.
  • அவற்றின் தீவனத்தில் பசும்புல் தீவனம் ஒரு ஆட்டிற்கு ஒரு நாளைக்கு 5 கிலோ என்ற அளவில் சேர்க்கப்பட வேண்டும்.

3.பெட்டைகளின் இறுதி ஒரு மாதம் சினைக் காலத் தீவனப் பராமரிப்பு :

  • இந்த காலத்தில், கரு வளர்ச்சி குட்டி ஈனும் வரை 60லிருந்து 80 சதவிகிதம் அதிகரிக்கும். மேலும் தீவனத்தில் எரிசக்தி பற்றாக்குறையிருப்பின் பெட்டைகள் சினைப்பருவ நச்சேற்றத்தினால் பாதிக்கப்படும்.
  • மேய்ச்சலுடன் ஒரு ஆட்டிற்கு ஒரு நாளைக்கு 250லிருந்து 350 கிராம் என்ற அளவில் அடர் தீவனமளிக்க வேண்டும்.
  • ஒரு ஆட்டிற்கு ஒரு நாளைக்கு 7 கிலோ என்ற அளவில் பசுந்தீவனம் சேர்க்கப்படவேண்டும்.

4.குட்டி ஈனும் சமயத்தில் பெட்டைகளின் தீவனப் பராமரிப்பு

  • குட்டி ஈனும் காலம் நெருங்கும் தருவாயில், தீவனத்தில் தானியங்களின் அளவை வெகுவாகக் குறைத்து, நல்ல தரமான உலர் புல் தீவனத்தைப் போதுமான அளவு அளித்தல் வேண்டும்.
  • குட்டி ஈனும் தினத்தன்று பொதுவாகக் குறைவாக தீவனமளிப்பதுடன் நிறைய  குளிர்ந்த நீர் அளிப்பது சிறந்தது.
  • குட்டி ஈன்றவுடன் பெட்டைகளுக்கு மிதமான வெப்ப நீர் அளிக்க வேண்டும்.
  • குட்டி ஈன்ற பின் பெட்டைகளின் தீவன அளவைப் படிப்படியாக அதிகரித்து,  தீவனமளிப்பதை ஒரு நாளைக்குஆறிலிருந்து ஏழு முறையாகப் பிரித்து, அதன் மூலம் தேவையான முழுத் தீவனத்தையும் அடையுமாறு செய்ய வேண்டும்.
  • பொதுவாகச் எளிதில் செறிக்கக்கூடிய தீவன மூலப் பொருட்களைக் கன்று ஈன்ற முதல் சில நாட்களில் தீவனத்தில் சேர்க்க வேண்டும்.
  • கோதுமைத் தவிடு மற்றும் பார்லி அல்லது ஓட்ஸ் அல்லது மக்காச்சோளம் 1 : 1 என்ற விகிதத்தில் சேர்த்தல் சிறந்தது.

5.பால் கொடுக்கும் பெட்டைகளின் தீவனப் பராமரிப்பு

Feeding lactating does

 


கீழ்க்கண்ட கலவைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

  • 6-8 மணி நேர மேய்ச்சலுடன் 10கிலோ பயிர்விக்கப்பட்ட பசுந்தீவனம் ஒரு நாளைக்கு
  • 6-8 மணி நேர மேய்ச்சலுடன் 400 கிராம் அடர்தீவனம் ஒரு நாளைக்கு
  • 6-8 மணி நேர மேய்ச்சலுடன் 800 கிராம் நல்ல தரமான பயிறு வகை உலர்புல் ஒரு நாளைக்கு

6.சினையுறாத பெட்டைகளின் தீவனப் பராமரிப்பு

  • மேய்ச்சல் நன்றாக இருப்பின், அடர்தீவன சேர்க்கைக்கு அவசியமில்லை.
  • நல்ல மேய்ச்சல் இல்லாத  நிலையில், ஒரு ஆட்டிற்கு ஒரு நாளைக்கு 150லிருந்து 200 கிராம் என்ற அளவில் அடர் தீவனம் அளிக்கலாம்

B.கிடாக்களுக்கு இனப்பெருக்கத்திற்கான தீவனப் பராமரிப்பு

  • கிடாக்களை பெட்டைகளுடன் சேர்ந்தே மேய்ப்பது தான் பொதுவான வழக்கம்.
  • அப்படிச் செய்வதன் மூலம் பெட்டைகளுக்குக் கிடைக்கும் அதே அளவு தீவனமும் ஊட்டச்சத்தும் கிடாக்களுக்கும் கிடைக்கும்.
  • கிடாக்களுக்கான தனியாக தீவனம் அளிக்க வேண்டுமானால். 3 பாகங்கள் ஓட்ஸ் அல்லது பார்லி, ஒரு பாகம் மச்சாச்சோளம் மற்றும் ஒரு பாகம் கோதுமை அடங்கிய அடர் தீவனக் கலவை, ஒரு நாளைக்கு ஒரு கிடாவிற்கு 300லிருந்து 500 கிராம் அளவில் அளிக்கப்பட வேண்டும்

C.குட்டிகளின் தீவனப் பராமரிப்பு

1.குட்டிகளுக்குச் சீம்பால் அளித்தல்

Feeding lactating does
  • குட்டிகள் பிறந்தவுடனேயே சீம்பால் கொடுக்க வேண்டும்.
  • பிறந்தது முதல் மூன்று நாட்கள் வரை தாய் பெட்டை மற்றும் குட்டிiயைப் பிரிக்காமல் இருந்தால் குட்டிகள் அடிக்கடி பால் குடிக்க உதவும்.
  • மூன்று நாட்களுக்குப் பின் தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட குட்டிகளுக்கு ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து மூன்று முறை பால் கொடுக்க வேண்டும்.
  • இரண்டு வார வயதின் போது, குட்டிகள் பசும் நார்ச்சத்துத் தீவனத்தை உட்கொள்ள பயிற்சி அளிக்க வேண்டும்.
  • குட்டிகளின் ஒரு மாத வயதின் போது, அடர் தீவனம் வழங்கப்பட வேண்டும்.

1.1 குட்டிகளுக்குச் சீம்பால் அளித்தல்

  • முதல் மூன்று அல்லது நான்கு தினங்களுக்குக் குட்டிகளுக்கு நல்ல சீம்பால் கிடைக்க அவற்றைத் தன் தாயிடம் பால் குடிக்க விடவேண்டும்.
  • குட்டிகளின் இழப்பைத் தடுப்பதில் சீம்பால் கொடுப்பது முக்கிய பங்களிக்கின்றது.
  • குட்டிகளுக்கு பசுவின் சீம்பால் மிகவும் சிறந்தது.
  • ஒரு கிலோ உயிர் உடல் எடைக்கு 100மி.லி. என்ற அளவில் சீம்பால் கொடுக்க வேண்டும்.
  • சீம்பாலை 1-1.5 சதவிகிதம் (கனஅளவு/எடை) ப்ரோhபியோனிக் அமிலம் அல்லது 0.1 சதவிகிதம் ஃபார்மால்டிஹைட் கொண்டு பதப்படுத்தலாம். சீம்பாலின் அமிலக் காரக் குறியீட்டைக் குறைவாகவே வைப்பதால் ப்ரோபியோனிக் அமிலமே ஏற்றதாகக் கருதப்படுகிறது.
  • இவ்வாறு பதப்படுத்தப்படும் சீம்பால், தரத்தைப் பாதுகாக்க குளிர் நிலையில் வைக்கப்பட வேண்டும்.

1.2 நிறைவான மாதிரி இளங்குட்டிகளின் தீவனக் கலவை

  • மக்காச்சோளம்                                 -           40 சதவிகிதம்
    வேர்க்கடலைப் புண்ணாக்கு          -           30 சதவிகிதம்
    கோதுமைத் தவிடு                            -           10 சதவிகிதம்
    எண்ணெய் நீக்கப்பட்ட அரிசி  உமி          -           13 சதவிகிதம்           
    கரும்புச் சர்க்கரைப் பாகு                 -           5 சதவிகிதம்
    தாது உப்புக் கலவை                                    -           2 சதவிகிதம்
    உப்பு                                                   -           1 சதவிகிதம்
    இவற்றுடன்உயிர்ச்சத்துக்கள் ஏ1, பி2 மற்றும் டி3, நுண்ணுயிர்க் கொல்லி ஆகியவை சேர்க்கப்பட்டு ஊட்டச்சத்து ஏற்றம் அளிக்கப்பட வேண்டும்.


1.3 பிறந்த நாள் முதல் 90 நாட்கள் வரை இளங்குட்டிகளுக்கான தீவனப்பட்டியல்:

வ.எண்

குட்டிகளின் வயது

பெட்டையின் சீம்பால் (அ) பசுவின் பால் (மி.லி.)

குட்டிகளின் தீவனம் (கிராம்)

நார்த்தீவனம் பசுமை/உலர்ந்த (கிராம்)

1

1-3 நாட்கள்

சீம்பால் –300மி.லி. 3 முறை

-

-

2

4-14 நாட்கள்

பால் – 300 மி.லி
3 முறை

-

-

3

15 – 30 நாட்கள்

பால் - 300 மி.லி.
3 முறை

சிறிது

சிறிது

4

31 – 60 நாட்கள்

பால் – 400 மி.லி.
2 முறை

100-150

போதுமான அளவு

5

61 – 90 நாட்கள்

பால் – 200 மி.லி.
2 முறை

200-250

போதுமான அளவு


2.மூன்று மாதம் முதல் 12 மாத வயது வரையிலான தீவனப் பராமரிப்பு

  • ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மேய்ச்சல்
  • ஒரு ஆட்டிற்கு ஒரு நாளைக்கு 100 லிருந்து 200 கிராம் என்ற அளவில் 16லிருந்து 18 சதவிகிதம் புரதத்துடன் சேர்ந்த அடர் தீவனக் கலவை.
  • கோடை மற்றும் மழை காலங்களில் இரவு நேரங்களில் உலர் புல் அளிக்க வேண்டும்.

மேலே செல்க